ஹோம்லேண்டரை அடித்து நொறுக்குவார்களா பட்சர் டீம்? – The Boys சீசன் 4 வெளியானது!

Prasanth Karthick
வெள்ளி, 14 ஜூன் 2024 (09:01 IST)
ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள ‘தி பாய்ஸ்’ தொடரின் நான்காவது சீசன் தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.



வாட் இண்டர்நேஷனல் என்ற தனியார் நிறுவனம் சூப்பர் சிரமை குழந்தைகளுக்கு செலுத்தி அதிசய சக்திகளோடு உருவாகும் அவர்களை சூப்பர் ஹீரோக்களாக காட்டி பணத்தில் கொழிக்கின்றனர். இந்த சூப்பர் ஹீரோக்கள் மனிதர்களை காப்பாற்றுவது போன்ற பிம்பங்கள் காட்டப்பட்டாலும் உண்மையில் அவர்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் செய்யும் தவறுகளை வாட் நிறுவனம் அனைத்து விதங்களிலும் டீல் செய்து மறைக்கிறது.

இந்த சூப்பர் ஹீரோக்களால் பாதிக்கப்பட்ட பட்சர், ஹியூகி உள்ளிட்ட சாதாரண மனிதர்கள் சேர்ந்து சூப்பர் ஹீரோக்களை எதிர்க்க முயல்கின்றனர். இதற்கு ஒரு சில சூப்பர் பவர் உள்ளவர்கள் அவர்களுக்கு உதவுகின்றனர். அதிக சக்தி வாய்ந்த ஆபத்தான சூப்பர் ஹீரோவான ஹோம்லேண்டரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்பதே பாய்ஸ் குழுவின் நோக்கம்.

சூப்பர் ஹீரோக்களை அழிக்கும் பட்சர் கேங்கின் முயற்சிகள் குறித்த வெப் சிரிஸ்தான் பாய்ஸ். இதுவரை 3 சீசன்கள் வரை வெளியாகியுள்ள இந்த தொடரின் 4வது பாகத்திற்கான எதிர்பார்ப்பு பலமாக இருந்து வந்த நிலையில் இன்று 4வது சீசன் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. அதிகமான பாலியல் காட்சிகள், ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள், கெட்ட வார்த்தைகள் நிறைந்திருப்பதால் இந்த தொடர் 18வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க கூடியதாக உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்