திருட்டு பசங்களுக்கு இவ்வளவு ரசிகர்களா? – ட்ரெண்டில் Money Heist S4

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (10:53 IST)
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் நெட்பிளிக்ஸின் பிரபல தொடர் ஒன்று இணையவாசிகள் இடையே ட்ரெண்டாகி உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வீடுகளில் முடங்கியுள்ள இளைஞர்களுக்கு பொழுதுபோக்காக இருந்து வருவது அமேசான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள்தான்.

இந்நிலையில் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் வெளியிட்ட மணி ஹெய்ஸ்ட் தொடரின் நான்காவது சீசன் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆரம்பத்தில் டெலிவிஷன் தொடராக எடுக்கப்பட்ட இது பெரும் வரவேற்பு கிடைக்காததால் நெட்பிளிக்ஸுக்கு விற்கப்பட்டது. ஸ்பானிஷ் தொடரான இது அந்த நாட்டில் பிரபலமாகாவிட்டாலும், உலக அளவில் பலரது பாராட்டுகளை பெற்றதால் அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின.

புரஃபசர் என்ற ஒருவனின் புத்திக்கூர்மையின் உதவியுடன் திட்டமிட்டு கொள்ளையடிக்கும் ஒரு திருட்டு கும்பலின் கதைதான் மணி ஹெய்ஸ்ட். இந்த வெப் சீரிஸை பார்த்து சிலர் திருட்டு முயற்சிகளை மேற்கொண்டதாக கூட சமீபத்தில் சில செய்திகள் வெளியாகின. தற்போது இந்த தொடரின் நான்காவது சீசன் வெளியாகி ட்ரெண்டாகியுள்ள நிலையில், இதற்கு ரசிகர் மன்றங்களையும் முகப்புத்தகங்களில் இளைஞர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்