இணையத்தில் நிர்வாணப் படம் - வீட்டில் முடங்கிய நடிகை

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2014 (14:21 IST)
ஹங்கர் கேம்ஸ் படம் ஜெனிஃபர் லாரன்சின் புகழையும், பேங்க் பாலன்ஸையும் ஒருசேர உயர்த்தியது போல், பிரச்சனைகளையும் அதிகப்படுத்தியது. அவரை அவருக்கே தெரியாமல் புகைப்படம் எடுக்கவும், அவரது அந்தரங்க வாழ்க்கையை அம்பலப்படுத்தவும் பாப்பராஸி என்கிற தனியார் பத்திரிகையாளர்கள் வெறிகொண்டு அலைகிறார்கள். 
அவர்களின் விடா முயற்சியால் ஜெனிஃபர் லாரன்சின் நிர்வாணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாயின. 
 
இந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் வீட்டைவிட்டு அதிகம் வெளியே வருவதில்லை. தன்னுடைய வாழ்க்கையை மற்றவர்கள் பிரித்து மேய்வதில் உடன்பாடு இல்லை என்றும் பத்திரிகையாளர்களின் தொல்லை காரணமாக வீட்டிலேயே ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்தபடி முடங்கிப் போவதாகவும் ஜெனிஃபர் கூறியுள்ளார்.
 
பிரபலமாக இருப்பதும் ஒருவகை பிரச்சனைதான்.