தினம் வீட்டில் எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றுவது நல்லது...?

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (15:28 IST)
தினம் வீட்டில் காலையும் மாலையும் தீபம் ஏற்றி வணங்கி வர திருமகள் நிலையாக வீட்டில் தங்கிவிடுவாள். இந்த தீபத்தை எப்படி வழிபடுவது, எந்த வகை திரி, எண்ணெய், எந்த உலோகத்தினால் செய்த விளக்கு உபயோகப்படுத்துவது என பார்ப்போம்.


திருவிளக்கின் வகைகள்: மண்ணால் செய்த விளக்கு, வெண்கலத்தால் செய்த விளக்கு, பஞ்சலோகத்தால் செய்த விளக்கு, வெள்ளிவிளக்கு, இவ்விளக்குகளில் தீபம் ஏற்றலாம். எவர்சில்வர் விளக்கு சனிக்கிழமை மட்டும் தோஷ சாந்தி செய்பவர்கள் ஏற்றலாம்.

இந்த உலோக விளக்குகளில் காமாட்சி அம்மன் திருவுருவம் அல்லது அஷ்டலட்சுமிகள் திருவுருவம் பொறிக்கப்பட்டு இருப்பின் உத்தமம். குத்துவிளக்கிலும் தீபம் ஏற்றலாம்.

நெய்: நெய் தீபம் ஏற்றுவது மகாலட்சுமிக்கு ப்ரிதி செல்வம் சேரும்.

எள் எண்ணெய்: தரித்திரத்தை போக்கும் மரண சனி பொங்கு சனியாக மாறி வளம் தருவார்.

தேங்காய் எண்ணெய்: கேது பகவானுக்கு ப்ரிதி, கேது தோஷம், கேது தசை நடப்பவர்கள் தொடர்ந்து இந்த எண்ணெயில் தீபம் ஏற்றி வரலாம்.

விளக்கெண்ணெய்: (முத்து கொட்டை) அம்மனுக்கு உகந்தது தைரியத்துடன், செல்வமும் சேரும், உறவுகள் பலபடும், புகழ் உண்டாகும்.

இலுப்பை எண்ணெய்: குலதெய்வ கோயிலுக்கு செல்பவர்கள் இந்;த எண்ணெயில் தீபம் ஏற்ற குலம் செழிக்கும். கடலை எண்ணெய்யை ஒரு போதும் தீபத்திற்கு உபயோகப்படுத்த கூடாது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்