பூஜை அறையில் தண்ணீர் வைக்கப்படுவதற்கான காரணம் என்ன...?

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (23:59 IST)
நம்முடைய பூஜை அறை மண் பானையிலேயோ அல்லது செம்பு பாத்திரத்திலேயோ தண்ணீரை நிரப்பி வைப்பது மிகவும் நல்ல பலனை கொடுக்கும்.
 
வழிப்பாட்டின் போது தினமும் தியானத்தில் அமர்ந்து நமக்கு பிடித்த தெய்வத்தின் மூல மந்திரத்தை சொல்ல வேண்டும். அவ்வாறு செய்வதால் நீங்கள் சொல்லும் மந்திரத்தின் அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும். இவ்வாறு செய்து அந்த தண்ணீரை அருந்துவதால் நன்மைகள் உண்டாகும்.
 
ஒவ்வொரு நாள் பூஜையின்போதும் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜை செய்ய வேண்டும். அடுத்த நாள் அதைக் கூரையில் ஊற்றிவிட வேண்டும். இப்படி  செய்வதால் துர்சக்திகள் நம் வீட்டை அண்டாது.
 
பூஜையின்போது மணியோசை எழுப்புவதும் கூட துர்சக்திகள் நெருங்காமல் இருப்பதற்குத்தான். மணியின் இனிய ஓசையானது தீய சக்திகளை விரட்டி, தெய்விக  சக்தியை வீட்டில் நிலவச் செய்யும் வல்லமை கொண்டது.
 
பூஜையின்போது ஐம்பூதங்களை அங்கே ஐக்கியமானால் அவர்களின் சக்தி நமக்கு கிடைக்கும். இதில் ஆகாயம் என்பது வெட்ட வெளி. அது பூஜை அறையில் வியாபித்து இருக்கும். அடுத்து நிலம். அது நம்மை தாங்கி நிற்கும் தரை. மூன்றவதாக நெருப்பு& அது நாம் பூஜை அறையில் ஏற்றும் தீபத்தில் உள்ளது. ஆனால் தண்ணீர் அங்கு இல்லை. அதற்காக நாம் தண்ணீரையும் அங்கு வைக்கிறோம். பூஜை அறையில் தண்ணீர் வைப்பதன் மூலம் ஐம்பூங்களின் சக்தி நமக்கு கிடைக்கும்  என்பதும் ஐதீகம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்