சந்திராஷ்டமம் என்றால் என்ன? கணக்கிடுவது எப்படி?

Mahendran
செவ்வாய், 24 டிசம்பர் 2024 (18:20 IST)
ஒருவர் பிறந்த சமயத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்த வீட்டைக் குறிக்கிறது. சந்திரன் எங்கே இருக்கிறதோ, அதைத்தான் நாம் "ராசி" என அழைக்கிறோம்.

நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாவது இடத்தில் சந்திரன் வரும்போது அதை "சந்திராஷ்டமம்" என்கிறோம். சந்திராஷ்டமம் என்றால் "அஷ்டமம் + சந்திரன்" என்று பொருள்படும். உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் இருப்பது இரண்டேகால் நாட்கள்தான் சந்திராஷ்டமம் காலமாகக் கொள்ளப்படும். அதேசமயம், நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலமும் சந்திராஷ்டமம் ஆகும்.

சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான சுப நிகழ்ச்சிகள் நடத்துவது தவிர்க்கப்படும். மணமகன் மற்றும் மணமகளுக்கான திருமண நாள், பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளும் சந்திராஷ்டம நாளில் செய்ய மாட்டார்கள்.  

சந்திராஷ்டமத்தின் போது மனதில் சில மாற்றங்கள் ஏற்படும். சில நேர்மறையற்ற எண்ணங்கள் தோன்றலாம், ஏனெனில் சந்திரன் மனதை ஆளும் கிரகம். இதனால் மனநிலையிலும் கருத்துகளிலும் கவனக்குறைவு காணப்படும். எனவே, இந்த நாட்களில் சற்று நிதானமாகவும் கவனமாகவும் செயல்படுவது உகந்தது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்