நவராத்திரியின்போது கொலு வைப்பவர்கள் எவ்வாறு கோலமிட வேண்டும்...?

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (13:39 IST)
இச்சா, கிரியா, ஞானமென மூன்று வடிவ சக்தியை வழிபட ஒன்பது ராத்திரிகள் அவை நவராத்திரி. பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே, சரியான நவராத்திரி வழிபாடு.


நவராத்திரி என்பது எல்லோரும் கொண்டாட வேண்டிய அற்புதமான பண்டிகை. குறிப்பாக, பெண்கள் அவசியம் வணங்க வேண்டிய பண்டிகை இது.

நவராத்திரியின் ஒன்பது நாளும் அம்பாளை ஆராதனை செய்யவேண்டும். ஒன்பது நாளும் ஒவ்வொரு விதமான கோலங்களிட்டு, ஒவ்வொரு விதமான பாடல்களுடன் அம்பாளை ஆராதிக்க வேண்டும்.

நவராத்திரியில் கொலு வைப்பவர்கள் என்றில்லாமல் எவர் வேண்டுமானாலும் இந்தக் கோலங்களை இடலாம். அம்பாளை வழிபடலாம். இதேபோல், ஒன்பது நாட்களும் அம்பாளைப் பாடல்கள் பாடி ஆராதிக்கலாம்.

கோலமிடும் முறை: அரிசி மாவுடன் செம்மண் கலந்து கோலமிட்டால், அம்பாள் அகம் மகிழ்வாள். கொலு வைத்திருக்கும் இடத்தில், நவக்கிரக கோலம் போட்டால், அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும். இன்று முத்து கோலம் போடுவது மிகச் சிறப்பு வாய்ந்தது.


விரதம் கைக்கொள்வோர், அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு, எட்டு நாட்களும், பகல் உணவின்றி, இரவு பூஜை முடித்து பிறகு, பால் பழம் உண்பது நல்லது.ஒன்பதாம் நாள், மகாநவமி அன்று, பட்டினியாய் இருந்து, மறுநாள் விஜயதசமியன்று, காலை, 9:௦௦ மணிக்கு முன், உணவு உண்ண வேண்டும். இப்படியாக இந்த விரதத்தை, ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்