திருவண்ணாமலை ஆருத்ரா தரிசனம், கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

Prasanth Karthick
வெள்ளி, 10 ஜனவரி 2025 (10:10 IST)

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் மற்றும் ஆருத்ரா தரிசனத்திற்கான நாள், நல்ல நேரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

மாதம்தோறும் பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையில் உள்ள மகாதீப மலையில் பக்தர்கள் கிரிவலம் சென்று சிவபெருமானை வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த மாதத்தில் பௌர்ணமியும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.

 

வரும் 13ம் தேதி மார்கழி மாத பௌர்ணமியில் அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கி மறுநாள் 14ம் தேதி அதிகாலை 4.46 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரமாக அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

ஜனவரி 13 அன்று ஆருத்ரா தரிசனமும், மகாதீபம் ஏற்றப்பட்ட கொப்பரையில் சேகரிக்கப்பட்ட மகாதீப மை கொண்டு நடராஜருக்கு அபிஷேகம் பூஜை நடத்தப்பட்டு, பிறகு மை பக்தர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பௌர்ணமி கிரிவலம், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்