காசியில் மட்டும் கருடன் பறப்பதில்லை.. ஏன் தெரியுமா?

Mahendran
திங்கள், 28 அக்டோபர் 2024 (18:55 IST)
ராமபிரான் ஆணையின்படி அனுமன் சுயம்புலிங்கம் ஒன்றை எடுத்துக்கொள்ள ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு புறப்பட்டார். காசியில் எங்கு பார்த்தாலும் லிங்கங்கள் நிறைந்திருந்தன. அவற்றுள் எது சுயம்புலிங்கம் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் அனுமன் குழப்பத்தில் ஆழ்ந்தார். 
 
அப்போது, கருடன் வட்டம் போட்டு ஒரு சுயம்புலிங்கத்தை குறிப்பிட்டுக் காட்டியது. அதற்குள் பல்லி சப்தம் செய்தது. இதைப் பார்த்து அனுமன் அந்த சுயம்புலிங்கத்தின் இடத்தை கண்டுபிடித்தார். 
 
இதனால் காசியில் எல்லை காவல் தெய்வமாகக் கருதப்படும் ஸ்ரீ பைரவர் கருடனையும், பல்லியையும் சபித்துவிட்டார். இதன் விளைவாக காசியில் கருடன் பறப்பது இல்லையென்றும், பல்லி ஒலிப்பதும் இல்லையென்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்