பாம்புக்கு பாலும் முட்டையும் வைக்கும் பழக்கம் உள்ளது ஏன் தெரியுமா...?

Webdunia
பாம்புக்கு பால் வைப்பது இன்றும் நடந்து வருகின்றது. ஆனால் எதற்காக என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. சிலர் பாம்பு பாலும், முட்டையும் தான் சாப்பிடும் என்பார்கள். உண்மை தெரியுமா பாம்பு, பால் முட்டை சாப்பிடுவதே இல்லையாம்.

 
பாம்பினுடைய நாக்கு பிளவுபட்டது. அதானால் பாம்பினால் பால் குடிக்க முடியாது என்று கண்டுபிடித்துள்ளனர். இது விஞ்ஞான ரீதியாக ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மை. ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள், அதாவது  மனிதர்களை விட பாம்புகள் அதிகம் இருந்தது.
 
ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. எனவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தன்  உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை வெளிபடுத்தும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.
 
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது, எனவே அதனால் இனப்பெருக்கம் செய்ய முடியாது, இது தான் உண்மையான காரணம் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்