அண்ணாமலையார் திருகோவிலில் மாசி சதுர்த்தசி திருமஞ்சனம் விழா கோலாகலம்..!

Senthil Velan
சனி, 24 பிப்ரவரி 2024 (10:11 IST)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அண்ணாமலைபட்டியில் உள்ள அருள்தரும்  உண்ணாமலை அம்மை உடனாகிய அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் ஆலயத்தில் அமைந்துள்ள நடராஜருக்கு  மாசி சதுர்த்தசி திருமஞ்சனம் நடைபெற்றது.
 
தொடர்ந்து நடராஜருக்கும் சிவகாமி   அம்மையாருக்கும்,மாணிக்க வாசகருக்கு கரும்பு சாறு, திருமஞ்சன பொடி, பால்,தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு நடராஜ பெருமானுக்கு சிறப்பு திருமஞ்சனம் அபிஷேகம் நடைபெற்றது.
 
நடராஜருக்கும் சிவகாமி அம்மையாருக்கும், மாணிக்க வாசகருக்கும் பக்தர்களிடம் காண்பித்து வணங்கி எடுத்து வரப்பட்ட குடத்தில் உள்ள புனித நீரை கொண்டு திருமஞ்சனம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
 
நடராஜ பெருமானுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா  பஞ்சமுக என பல்வேறு தீபங்களாலும் நடராஜ பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை பூஜை காண்பிக்கப்பட்டது.

ALSO READ: தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் தகவல்..!!
 
மாசி சதுர்த்தசி திருமஞ்சனம் விழாவிற்கு ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற்று சென்றனர். கோவிலுக்கு வந்து இருந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்