குமரியில் 12 சிவாலயங்களில் மகாசிவராத்திரி உற்சவம்! கடலென திரண்ட பக்தர்கள்! – பேருந்து, ஆட்டோ கிடைக்காமல் அவதி!

Prasanth Karthick
வெள்ளி, 8 மார்ச் 2024 (11:00 IST)
இன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படும் நிலையில் குமரியில் உள்ள 12 சிவாலயங்களிலும் சிவராத்திரி உற்சவத்திற்காக மக்கள் குவிந்து வருவதால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.



ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகாசிவராத்திரி அன்று பல இந்து பக்தர்களும் சிவாலயங்கள் சென்று வழிபடுவது வழக்கம். கன்னியாக்குமரியில் உள்ள புகழ்பெற்ற 12 சிவாலயங்களிலும் இந்த நாளில் சிவாலய ஓட்டம் நிகழ்வு நடைபெறுகிறது. மகாசிவராத்திரியான இந்த ஒரு நாளுக்கு 110 கி.மீ சுற்றளவில் வெவ்வேறு ஊர்களில் அமைந்துள்ள இந்த 12 சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வணங்கினால் சிவபெருமான் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இன்று சிவாலய ஓட்டம் தொடங்கிய நிலையில் கல்குளம், திக்குறிச்சி, திற்பரப்பு, திருமலை, பொன்மனை, திருநந்திக்கரை, பன்றிப்பாகம், திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, மேலாங்கோடு, திருப்பன்றிக்கோடு மற்றும் திருநட்டலாம் ஆகிய 12 திரு ஸ்தலங்களுக்கும் பக்தர்கள் ஓடி ஓடி சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதில் பேருந்து, ஆட்டோ, மினி வேன் என அனைத்து வாகனங்களுக்கும் டிமாண்ட் அதிகரித்துள்ளது. பலரும் வெளியூரிலிருந்து சொந்த வாகனத்திலேயேவும் வந்துள்ள நிலையில் வாகனங்களை நிறுத்துவது மற்றும் சாலை போக்குவரத்திலும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்