திருவண்ணாமலையில் எத்தனை நாட்கள் மகாதீபம் காட்சி தரும்? தேவஸ்தானம் அறிவிப்பு..!

Mahendran
சனி, 14 டிசம்பர் 2024 (16:19 IST)
திருவண்ணாமலையில் நேற்று ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நேற்று மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில் தினசரி மாலை 6 மணிக்கு இந்த தீபம் ஏற்றப்படும் என்றும், மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும் என்றும் இந்த மகா தீபத்தை வருகின்ற 23ஆம் தேதி வரை அதாவது 11 நாட்கள் பக்தர்கள் தரிசிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
11 நாட்கள் நிறைவேற்ற பின்னர் தீபக்கொப்பரை எடுத்துவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து அதன் பின் அந்த தீப கொப்பரை பாதுகாப்பாக ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் தீபத் திருவிழாவின் தொடர் நிகழ்வாக இன்று இரவு ஸ்ரீ சந்திரசேகர் தெப்பல் உற்சவம் நடைபெறும் என்றும், நாளை இரவு ஸ்ரீ பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம், நாளை மறுநாள் இரவு ஸ்ரீ சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்