ஆயுத பூஜை பெயர் வந்ததன் காரணம் என்ன?

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (15:35 IST)
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை நாளை கொண்டாப்படும் நிலையில்  இந்த விழாவுக்கான பெயர் சூட்டப்பட்டதன் வரலாறு மிக சுவாரஸ்யமானது.
 
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்றது நம் அனைவருக்கும் பரிட்சியமே.  நாடு இழந்து பெருமை இழந்து, வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமர பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.
 
பின்னர் 14 வருட வனவாசத்திற்கு பிறகு நாடு திரும்பிய பாண்டவர்கள், அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.
 
அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்