செவ்வாய் கிழமை விரதம் இருப்பதால் என்ன பலன்கள் தெரியுமா...?

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (15:10 IST)
மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதி செவ்வாய் ஆவார். இந்த செவ்வாய் மகரத்தில் உச்சம் பெறுவார். கடகத்தில் நீச்சம் பெறுவார். சிம்மம் மற்றும் மகர ராசிக்கு செவ்வாய் யோகத்தை செய்யக் கூடிய கிரகம் ஆவார்செவ்வாய்க்கு உரிய எண் 9.


செவ்வாய்க்கு உரிய தெய்வம் சுப்பிரமணியர். அதனால் செவ்வாய் அன்று முருகனை வழிபடுதல் சிறப்பு. செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையிலேயே நீராடி, அருகில் இருக்கும் முருகப் பெருமான் கோவிலுக்கு சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும் வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை தொடங்கவேண்டும்.

வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து முருகனை நினைத்து சஷ்டி கவசம், கந்தகுரு கவசம் போன்ற முருகப் பெருமானுக்கு உரிய தோத்திரங்கள் மந்திரங்கள் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். அதன்பின் மாலை 6 மணிக்கு மீண்டும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.

பலன்கள்: தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் விரதமிருந்து முருகனை உளமாற வழிபடுவதால், உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பின் அதன் தீவிரம் குறைந்து நன்மை உண்டாகும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும். கோழைத்தனம், பய உணர்வுகள் நீங்கி, தைரியம் மற்றும் தன்னம் பிக்கை பிறக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந் து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்