திருஷ்டியால் தீய சக்திகள் அகற்றப்படுகிறதா?

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (00:03 IST)
நமது முன்னோர்கள் முதல் இன்று வரை ஆரத்தி எடுக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை. சாதாரண  நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது.
 
புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு, மகப்பேறு முடித்து  வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
 
ஆரத்தி எடுக்க ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் தூளுடன் சிறிது குங்குமம் சேர்த்தும் செய்யலாம். அல்லது  மஞ்சளுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலப்பதால் சிவப்பு நிறம் வரும். இதன் நடுவில் ஒரு வெற்றிலையை வைத்து அதன் மேல் ஒரு கற்பூரத்தை ஏற்றி, சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று  கூறுகின்றோம்.
 
ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது. மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும்  அவனைச் சுற்றியுள்ள தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது  அதிகம் விழ வாய்ப்பு கூடுதலாக உள்ளது. 
 
மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்