சர்வ காரிய சித்தி உண்டாகும் ஆஞ்சநேயர் வழிபாடு

Webdunia
அனுமனை மனத்தில் நினைப்பவர்கள் இம்மையில் சர்வ காரிய சித்தி பெற்று ஆரோக்கிய பலத்துடன் வாழ்வதுடன் மறுமையில் ராமன் அருளால் முக்தியும் அடைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.


 
 
உடல் வலிமைக்கு உருவமாக அனுமன் கருதப்படுகிறார். உடல் வலிமையைப் பெருக்க விரும்புபவர்கள் அனுமனை வழிப்பட்டால் பலன் கிடைக்கும். மக்கட்பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றவற்றை பெறலாம்.
 
ஆஞ்சநேயரை வழிப்பட்டால் மனதில் உள்ள சங்கடங்கள் தீரும். தொழில் அபிவிருத்தி அடையும். குடும்ப கஷ்டங்கள் தீரும். 
 
நோய்கள் விலகி ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். கல்வியில் மேன்மை ஏற்படும்.
 
ஆஞ்சநேயரை வழிப்பட சொல்லவேண்டிய மந்திரம்:
 
ஓம் ஜம் ஹரீம், ஹனுமதே ராமதூதாய
லங்கா வித்வம்ஸனாய; அஞ்ஜனா கர்ப்ப ஸ்ம்பூதாய, 
ஸாகினீடாகினீவித்வப்ஸனாய, கிலகிய பூபூ காரினே
விபீஷணாய, ஹனுமத் தேவாய, ஓம் ஐம்
ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம் ஹீரீம் ஹ்ரும் பட் ஸ்வாஹா
 
அனுமன் மந்திரத்தின் பொருள்:
 
செயற்கரிய செயல்புரியும் என் சுவாமியே உம்மால் இயலாததும் உள்ளதோ சொல்வீர்.
ஸ்ரீ ராமதூதரும் கருணைக் கடலும் ஆகிய ஆஞ்சநேயரே என் பிராத்தனையை நிறைவேற்றிட அருள்புரிய வேண்டும்.