1 லட்சத்து 8 வடைகளால் பிரம்மாண்ட மாலை! நாமக்கல் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்!

Prasanth Karthick
திங்கள், 30 டிசம்பர் 2024 (09:01 IST)

இன்று அனுமன் ஜெயந்தியை சிறப்பிக்கும் விதமாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலையால் ஆஞ்சநேயர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

நாமக்கலில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தமிழக அளவில் பிரபலமான ஆஞ்சநேயர் கோவிலாக உள்ளது. இங்கு ஒரே கல்லால் செய்யப்பட்ட 18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

 

அந்த வகையில் இன்று அனுமன் ஜெயந்தியை சிறப்பிக்கும் விதமாக ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணிக்கு வடை மாலை சார்த்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர். 

 

இன்று ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்