ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 வஸ்திரங்கள்.. பக்தர்கள் பரவசம்..!

Mahendran
வியாழன், 12 டிசம்பர் 2024 (18:07 IST)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில், 108 வைணவ திருத்தலங்களில் மிக முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சுக்ல பக்‌ஷ ஏகாதசியன்று, நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள்புரிந்த நிகழ்வு நினைவாக, குளிர்காலம் தொடங்குவதன் மூலம் அந்த பரிசுகளை பக்தர்களுக்கு வழங்குவதற்காக, கோவிலில் சிறப்பு வைபவம் நடத்தப்படுகிறது. இந்த வைபவத்தில் 108 வஸ்திரங்கள் சாற்றப்பட்டு, சுவாமிகளுக்கு அருள் பாலிக்கப்படுகிறது.

இன்று இந்த வைபவம் அதிகாலை நடைபெற்றது. அதில், ஒரே நாளில் கருடாழ்வார் சன்னதியிலிருந்து புறப்பட்டு, பகல் பத்து மணிக்கு அனைத்து தெய்வங்களும் பங்குபெற்று மண்டபத்திற்கு எழுந்தருளினர்.

இங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களுக்கு 108 வஸ்திரங்கள் சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சாரல் மழை மற்றும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.  



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்