ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ப்பதால் என்ன பலன்கள்...?

Webdunia
எந்த வகையான சருமமாக இருந்தாலும் சரி, ஐஸ் கட்டி மேஜிக் போல உங்கள் சருமத்தில் மாயம் செய்யும். நாள் முழுவதும் அலைந்து வேலை செய்வதால் உடலும் சருமமும் சோர்ந்து விடுகிறது. 

சருமத்தின் சோர்வுகளை ஐஸ் கட்டி கொண்டு நீக்கி விடலாம். இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முகத்தை ஐஸ் பொலிவு பெற செய்யும். ஐஸ் பேஷியல் தான் தற்போதைய டிரெண்டிங்காக உள்ளது.
 
எல்லாரும் தன்னுடைய சருமம் பிரகாசமாக பளிச்சென்று இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகமாகி முகம் பளிச்சென்று ஆகிவிடும். 
 
ஐஸ் கட்டியை தேய்ப்பதால் இரத்த குழாய்கள் முதலில் சுருங்கி இரத்த ஓட்டம் குறையும். பின்னர் இதை ஈடு செய்ய நம்முடைய உடல் அதிகமாக இரத்த ஓட்டத்தை முகத்தில் ஏற்படுத்தும். இது முகத்தை பொலிவாக மற்றும் உயிர்ப்பாக மாற்றும்.
 
நமது முக அழகை கெடுக்கும் கருவளையங்களை ஐஸ் கட்டி கொண்டு விரட்டி விடலாம். இதற்கு நீங்கள் சிறிதளவு ரோஸ் வாட்டரை கொதிக்க வைத்து பின்னா் அதில் வெள்ளரிக்காய் சாறு கலந்து இதை ஐஸ் ட்ரேயில் வைத்து ஃபிரிசரில் வைத்து விடுங்கள். இதை முகத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால் கருவளையம்  ஓடிவிடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்