நகங்களை பராமரிக்க நாம் செய்யவேண்டிய குறிப்புகள் !!

Webdunia
நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக் கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றிநோய் ஏற்படவும் காரணமாகிறது.

* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கிவிடலாம்.
 
* நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக்கூடாது. இதனால் நகங்கள் உடைந்துபோக வாய்ப்பு அதிகம். நகம்வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்டவேண்டும்.
 
* சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத்தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை உண்டாகும்.
 
* நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ள வே ண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
 
* சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெய்யை நகங்களிலும் தடவலாம். இதுநகங்களின் மேற்பு ற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.
 
* சமையலறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச் சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்க ளைப்பயன்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்