சிவப்பு சந்தனத்தின் அற்புத மருத்துவ குணங்களும் பயன்களும் !!

Webdunia
சிவப்பு சந்தன மரம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வளர்கிறது. இந்தியாவில் மற்றும் நேபாளத்தில் அதிகம் வளர்கிறது.சிவப்பு சந்தனம் இதன் அழகு மற்றும் மருத்துவ குணங்களால் உலகெங்கும் இதன் தேவை அதிகம்.

சிவப்பு சந்தனதூள் அனைத்து ஆயுர்வேத, சித்த மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சந்தனம் வெப்பமும் குளிர்ச்சியும் உடையது. 
 
ஒரு ஸ்பூன் அளவு சிவப்பு சந்தனத்தூளுடன் அதே அளவு கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் இவற்றுடன் தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
 
கடலை மாவு இறந்த செல்களை நீக்கவும், எண்ணெய் சருமத்தில் முகப்பருக்கள் நிறைய தோன்றும் எனவே மஞ்சள் சேர்ப்பதால் முகப்பரு நோய்த்தொற்று ஏற்பட்டு புண்கள் ஆகாமலும், நாளடைவில் முகப்பரு வடுக்கள் நீங்கவும் உதவிப்புரிகிறது.
 
சிறுநீர் பெருக்கியாகவும் ,இரத்த சுத்திகரிப்பி ,செரிமான கோளாறுகள் நீங்க ஆங்கில மருத்துவத்தில் பயன்படுகிறது. இதைக்கொண்டு முகப்பூச்சுப்பொடி, குளிக்க சவர்க்காரம், சந்தனாதித் தைலம், பஞ்சகற்பம், மனோமகுட தூபப்பொடி, சந்தன எண்ணெய் போன்ற அநேக உபப்பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.
 
ஒரு டீஸ்பூன் சிவப்பு சந்தனதூளுடன் அதே அளவு காய்ச்சாத பச்சைப்பால் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகம் கழுவவும். இதனை தொடர்ந்து பூசும் போது தோல் பளிச்சிடும், வெயிலில் கருத்த தோலின் நிறம் பொலிவு பெறும்.வறண்ட தோல் மென்மையாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்