தலைமுடியை கருகருவென வளர சூப்பர் டிப்ஸ் !!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (16:13 IST)
நூறு கிராம் கருப்பு எள்ளை வெந்நீரில் ஊறவைக்கவும். இதை அரைத்து விழுதாக்கி தலையில் தேய்த்து மிதமான சூடுள்ள தண்ணீரில் அலசுவது, தலைமுடியை கருகருவென வளர செய்யும்.


கரிசலாங்கண்ணிச் சாறு, சோற்றுக்கற்றாழை ஜெல் இரண்டும் சம அளவு எடுத்து 2 மடங்கு தேங்காய் எண்ணெயில் கலந்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். தைலம் பதம் வந்ததும் இறக்கவும். இதை தினமும் தலைக்குத் தடவினால் முடிப் பிளவு மற்றும் உதிர்வது சரியாகும்.

ஒரு பிடி பச்சை கறிவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் தேங்காய்ப் பால் சேர்த்து அரைத்து, தலையில் பேக் போட்டு பச்சை தண்ணீரில் அலசுங்கள்.ஒரு நாள் விட்டு ஒருநாள் இந்த பேக் போட்டு வரவும். முடி வளர்ச்சி தூண்டப்பட்டு, கருகருவென முடி வளரத் தொடங்கும்.

வறண்ட கூந்தலுக்கு ஒரு சிகிச்சை பயத்தம் பருப்பு, வெந்தயம், செம்பருத்திப் பூ, பூலாங்கிழங்கு தலா 50 கிராம் எல்லாம் சேர்த்து அரைத்து சலித்து, தலைக்குத் தேய்த்துக் குளிப்பது கூந்தல் வறட்சியைப் போக்கும். முடி மிருதுவாகும்.

சாதாரண கூந்தலுக்கு ஒரு சிகிச்சை  தேங்காய்ப் பால் கால் கப், ஓமத்தூள், கடலை மாவு தலா 20 கிராம், வெந்தயத் தூள் 10 கிராம் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கண்டிஷனராக உபயோகிப்பது முடிக்கு நல்ல அடர்த்தியையும் வளர்ச்சியையும் தரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்