முழங்கையில் உள்ள கருமை நீக்கி வெள்ளையாக்க சில டிப்ஸ் !!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (16:19 IST)
டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முழங்கையில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்யுங்கள். இதனால் முழங்கால் விரவில் வெள்ளையாகும்.


மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முழங்கையில் தடவி நன்கு காய்ந்த பின், சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். நல்ல பலன் கிடைக்க, வாரத்திற்கு பலமுறை செய்யலாம்.

தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து கலந்து முழங்கையில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்து வர, முழங்கை கருமை காணாமல் போகும்.

எலுமிச்சை சாற்றை நேரடியாக முழங்கை பகுதியில் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி தினமும் என 1-2 வாரம் தொடர்ந்து செய்து வாருங்கள். முழங்கையில் இருக்கும் கருமை போய்விடும். எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள்.

டேபிள் ஸ்பூன் தேனில், பால் மற்றும் மஞ்சள் தூளை சரிசம அளவில் கலந்து, முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். வேண்டுமானால் தேனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.

தினமும் பாலை பஞ்சுருண்டை பயன்படுத்தி முழங்கையில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால், விரைவில் முழங்கையில் உள்ள கருமை நீங்கி, முழங்கை வெள்ளையாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்