பலருக்கும் தலைமுடி உதிர்வு பிரச்சினையாக உள்ளது. இதை தீர்க்க வெங்காய ஹேர்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.
வெள்ளை வெங்காயம், சிவப்பு வெங்காயம், சாம்பார் வெங்காயம் மூன்றிலுமே ஒரே மாதிரியான மருத்துவக் குணங்கள் உள்ளன. இது, கால்சியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, சல்ஃபர் போன்ற சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக, சாம்பார் வெங்காயத்தில் சல்ஃபர் மற்றும் கால்சியத்தின் அளவு அதிகம்.
முடி வளர்ச்சிக்கும், நுனி முடி பிளவுபடாமல் இருப்பதற்கும் சீரான ரத்த ஓட்டம் அவசியம். வெங்காயத்தில் உள்ள சல்ஃபர், நம் ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, முடியின் வேர்களுக்கு உறுதியை அளித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. வெங்காயம் சிறந்த ஆன்டிபயாடிக்காகவும் செயல்படுகிறது.
செய்முறை: வெங்காயத்தினை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்துடன் நீர் சேர்த்து மிக்சியில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தயிர் மற்றும் மயோனைஸ் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவிட்டுப் பயன்படுத்தவும். இந்த வெங்காய ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினை தீர்வுக்கு வரும்.