இதனுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து சருமத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும். பின்பு 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின்பு சருமத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை, இந்த முறையை செய்து வர சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் காணப்படும்.
ஆலிவ் எண்ணெயில் கொஞ்சம் சர்க்கரை கலந்து, உதடுகளில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி படுத்தால் முகத்தில் இருக்கும். அழுக்குகள் வெளிவருவதோடு, வயதான தோற்றத்தையும் கட்டுப்படுத்தும். மேலும் இதை உதடுகளில் தடவினால் உதட்டில் வெடிப்பு ஏற்படாமல் மென்மையாக பிங்க் நிறத்தில் மாறும்.