முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்கி பொலிவை தரும் அழகு குறிப்புகள் !!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (09:23 IST)
முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் மூன்றையும்  கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினால், நல்ல பலன் கிடைக்கும்.


வாழைப்பழத்தை மசித்து அதில் பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், நல்ல பொலிவுடன் காணப்படும். ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பு இரண்டையும் அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.

கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு இரண்டையும்  சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகிய மூன்றையும் சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

தேன் மற்றும் பால் இரண்டையும்  கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவிவர, முகம் பொலிவுடன் காணப்படும்.

முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து காய்ந்த பின்னர், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்