முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்கும் அழகு குறிப்புகள் !!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (10:37 IST)
வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சரும பராமரிப்பிற்கு பெருமளவில் உதவி புரிகின்றது.


சிறிதளவு வேப்பிலையை அதாவது  கொழுந்து இலைகள் கொஞ்சம் துளசி இலை இவை இரண்டையும் கழுவி நிழலில் வைத்து உலர்த்தி நன்கு உலர்ந்த பின் பொடி செய்யவேண்டும்.

தூள் செய்த வேப்பிலை பொடியுடன் சிறிதளவு கடலை மாவு மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ள வேண்டும். இவை மூன்றும் கலந்த பின் முகத்தில் பூசி 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படியே தினமும் 2 வேளை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மாறி முகம் பளபளப்பாகும்.

கரும்புள்ளிகள், பருக்களின் தழும்புகள் மறைய: வேப்பிலை மற்றும் சந்தனம். வேப்பிலை பொடி, சந்தனப்பொடி மற்றும் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளவும். இதை முகத்தில் தடவி, அரை மணி நேரம் உலர வைத்து பின்பு குளிர்ந்த தண்ணீரில் கழுவிக் கொள்ளலாம். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைந்துவிடும்.

பச்சை வேப்பிலை, தேன் மற்றும் தண்ணீரை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதை முகத்தில் தடவி, அரைமணி நேரம் உலர வையுங்கள். பின்பு முகத்தை கழுவிக் கொள்ளலாம்.இதனால் சோர்வாக இருக்கும் சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

வேப்பிலை பொடியுடன், பப்பாளி மற்றும் தண்ணீரை சேர்த்து அரைத்து, இதை முகத்தில் தடவி அரை மணி நேரம் வரை காத்திருங்கள். பின்பு முகத்தை கழுவினால் பிரகாசமாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்