மனித உடலில் 2 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம்.. என்ன வேலை செய்யும் தெரியுமா?

திங்கள், 9 அக்டோபர் 2023 (19:08 IST)
ஒவ்வொரு மனிதனின் உடலில் இரண்டு லிட்டர் ஹைட்ரோகுளோரைக் அமிலம் சுரக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் அதன் பணி என்ன என்பதை பார்ப்போம். 
 
நாம் உணவு சாப்பிட்டவுடன் இரைப்பையில் செரித்து அதை ஆற்றலாக மாற்றுவதற்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் தான் உதவுகிறது. நாம் சாப்பிட ஆரம்பித்தவுடன் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை இரைப்பை உற்பத்தி செய்யும். 
 
ஒவ்வொரு நாளும் சுமார் 2 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கப்படுவதாகவும் இந்த அமிலம் தான் உணவு மூலப் பொருளை சிதைத்து  சின்ன சின்ன மூலக்கூறுகளாக மாற்றி  அதன் ஆற்றல் எடுக்கப்படுவதாகவும் தெரிகிறது. 
 
மேலும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை செயலிழக்க செய்வதற்கும் இந்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் தான் உதவுகிறது. இந்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் அளவு சரியாக இருக்க வேண்டும்.  காரம் அல்லது கொழுப்பு நிறைந்த சாப்பாடுகளை சாப்பிடும்போது அதிகப்படியாக அமிலம் வெளியேறுவதால் சில பாதிப்புகள் ஏற்படும்.  
 
ஹைட்ரோகுளோரைக் அமிலம் என்பது ஒரு சிறிய இரும்பு தகடை கூட 24 மணி நேரத்திற்குள் கரைக்கும் சக்தியை கொண்டது என கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்