பெண்களுக்கு முன்கூட்டியே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவது எதனால்?

செவ்வாய், 3 அக்டோபர் 2023 (18:22 IST)
பொதுவாக பெண்களுக்கு 45 வயது முதல் 50 வயது இருக்கும் போது மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும். இதில் ஒரு சிலர்  உடல் தன்மையை பொறுத்து மாறுபடும். 
 
ஆனால் ஒரு சிலருக்கு அரிதாக 40 வயதிற்கு முன்பே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் கருமுட்டையின் எண்ணிக்கை தான்.  
 
பிறக்கும்போதே குறைவான கருமுட்டைகள் கொண்ட பெண்களுக்கு 40 வயதுக்கு முன்பாகவே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. 
 
பொதுவாக பிறக்கும்போது பெண்களின் உடலில் 4 லட்சம் கருமுட்டைகள் இருக்கும் என்றும் ஒரு சில பெண்களுக்கு குறைவான கருமுட்டை இருந்தால் அவர்களுக்கு 40 வயதுக்கு முன்பாகவே மாதவிடாய் நின்று விடும் என்றும் கூறப்படுகிறது.  
 
45 வயதுக்கு முன்பாக மாதவிடாய் நின்று விட்டால் உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்