தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

Mahendran
வியாழன், 2 ஜனவரி 2025 (18:30 IST)
சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை பொதுவாக வாக்சிங் மூலம் நீக்குவோம். ஆனால், தற்பொழுது பயன்படுத்தப்படும் வாக்சிங் பொருட்களில் அதிக அளவு கெமிக்கல்கள் கலந்திருப்பதால், அவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. எனவே சருமத்தின் அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க, கெமிக்கல்களை தவிர்க்கும் விதமாக இயற்கை பொருட்களை பயன்படுத்தி முடிகளை நீக்குவது நல்லது. இதற்கு பல இயற்கை வழிகள் உள்ளன, அவற்றின் மூலம் முடிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியும்.
 
தேன் மற்றும் எலுமிச்சை சாறு:
 
1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 4 டீஸ்பூன் தேன் சேர்த்து, சருமத்தில் தேவையற்ற முடி உள்ள பகுதிகளில் தடவி, 10-20 நிமிடம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், நல்ல மாற்றம் கிட்டும்.
 
மஞ்சள் தூள் மற்றும் பால்:
1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் முடி வளர்ந்த இடத்தில் தடவி, சிறிது நேரம் வட்ட சுழற்சியில் தேய்த்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்யும்போது, தேவையற்ற முடி வளர்ச்சி தடுக்கப்படும்.
 
மஞ்சள், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் பால்:
 
1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளுடன் சிறிது உப்பு சேர்த்து, எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் பாலை கலந்து, இந்த கலவையை சருமத்தில் தடவி 5 நிமிடம் ஸ்க்ரப் செய்து, பின்னர் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், முடிகள் உதிர்ந்து விடும்.
 
தயிர் மற்றும் கடலை மாவு:
தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி ஊற விட்டு கழுவினால், தேவையற்ற முடிகள் அகல்ந்து விடும்.
 
     
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்