குழந்தை பெற்ற தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சம்.

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (21:52 IST)
குழந்தை பிறப்பு என்பது ஒரு தாய்க்கு மறுபிறப்பு என்று கூறுவது உண்டு. அந்த வகையில் குழந்தை பெற்ற தாய்மார்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன குறித்து தற்போது பார்ப்போம்
 
குறிப்பாக குழந்தை பிறந்த பெண்கள் கண்டிப்பாக தினசரி ஆறு மணி நேரம் தூங்க வேண்டும் என்றும் அதிகபட்சமாக 8 மணி நேரம் தூக்கம் வேண்டும் என்றும் கூறப்படுகிறது 
 
ஆனால் குழந்தை பிறந்த பிறகு குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பதற்காக பல தாய்மார்கள் தூக்கத்தை குறைத்துக் கொள்வார்கள் என்றும் அது அவர்களுடைய ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மனச்சோர்வு இருக்கும் என்றும் குழந்தையை தாய் அருகிலேயே தூங்கும்போது குழந்தை எழுந்து விடுமோ என்ற யோசனையிலேயே தாய் சரியாக தூங்க மாட்டார் என்றும் எனவே குழந்தைகளை கவனித்துக் கொள்வதோடு தங்களுடைய உடலையும் தாய்மார்கள் கவனித்துக் கொள்ள சரியான நேரத்தில் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்