இரவு 10 மணிக்குள் தூங்க வேண்டும். இதனால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

Mahendran
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (18:02 IST)
தற்கால இளைஞர்கள் தாமதமாக தூங்குகின்றனர் என்றும் மொபைல் மற்றும் டிவி பார்த்துக் கொண்டு இரவு 12 மணிக்கு மேல் தூங்குவதால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது. எனவே இரவு 10 மணிக்குள் தூங்கி விட வேண்டும் என்றும் அதனால் பல நன்மைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இரவு சீக்கிரமாக தூங்க செல்வதால் இதய ஆரோக்கியம், மன ஆரோக்கியம் கிடைக்கும் என்றும் தாமதமாக தூங்குவதால் தான் இதய நோய் ஏற்படுகிறது என்றும் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

ஒரு மனிதனுக்கு குறைந்தது 8 மணி நேரம் தூக்கம் அவசியமென்பதால் இரவு 10 மணிக்கு தூங்கி காலை 6:00 மணிக்கு எழுந்தால் மறுநாள் சில உடற்பயிற்சிகளை செய்து அன்றைய தினத்திற்கு தயாராகலாம் என்று கூறப்படுகிறது.

இதயம் மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் என்றால் இரவு 10 மணிக்குள் தூங்கி விட வேண்டும் என்றும் காலதாமதமாக தூங்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொண்டால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக ஐரோப்பிய இதய இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை கூறுகின்றது.

மேலும் இரவு தாமதமாக தூங்க சென்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும் என்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு சீக்கிரம் தூங்குவது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இரவில் சீக்கிரமாக தூங்குவதால் தேவையற்ற கொழுப்பை எரிக்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்