தலைமுடி உதிர்வை தடுக்க இதோ பாட்டி வைத்தியம்

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (00:22 IST)
இன்றைய நவீன உலகில் மாசு காற்றாலும், சுத்தமற்ற நீர் ஆதாரங்களாலும் மனித உடலுக்கு பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிரது. அதில் முக்கிய பிரச்சனையாக உள்ளது தலைமுடி. அதுவும் ஆண்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. 
 
எளிமையான முறையில் தலைமிடி உதிர்வை தடுக்க இதோ சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
 
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும். 
 
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்துக்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.முடி உதிர்ந்த பகுதிகளில் முடி வளர கீழா நெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் பலனிருக்கும்.முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
 
கரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
 
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி, தேங்காய் எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டிதேய்த்து வந்தால் முடி கருமையாகும்.தலைமுடி கருமை, மினுமினுப்புப் பெற அதிமதுரம் 20 கிராம் அளவை, 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊற வைத்து, 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.முடிகொட்டிய இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு நன்றாக அரைத்துத் தடவிவர வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்