இரவில் அதிக நேரம் மொபைல் பார்ப்பதால் மூளைக்கு பாதிப்பா?

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (17:58 IST)
இரவு நேரத்தில் தூக்கம் வரவில்லை என்றால் அதிக நேரம் மொபைல் பார்ப்பது பலரது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் இரவில் நீண்ட நேரம் மொபைல் பார்ப்பதால் மூளை பாதிப்பு ஏற்படும் என்று  எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
 இரவு நேரத்தில் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்திவிட்டு காலையில் அதிக நேரம் தூங்கினால் உடல் சோர்வாக இருக்கும் என்றும் ஒரு கட்டத்திற்கு மேல் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் இரவு நேரத்தில் அதிக நேரம் மொபைல் பார்த்துக்கொண்டு காலதாமதமாக தூங்கினால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்றும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி  இரவு நேரத்தில் மொபைல் போனிலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தினால் மூளையில் மெலடோனின் என்ற ஹார்மோன் சரியாக சுரக்காமல் இருக்கும் ஆபத்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே மொபைல் போனை அளவோடு பயன்படுத்தி வளமாக வாழ அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்