பழங்களில் வைட்டமின்கள், நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் நீர் சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. இவை உங்களை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றன. கோடை காலங்களில் காலை வேளையில் வெள்ளரிக்காய், தர்பூசணி, திராட்சை, ஆரஞ்சு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
செரிமான சக்தியை அதிகரிக்க உதவும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகம் கொண்ட உணவாக தயிர் இருக்கிறது. மேலும் கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துவதால் காலை உணவில் தயிர் சேர்த்துக்கொள்வது இந்த கோடை காலத்தில் நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும்.