கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 18 லட்சம் குழந்தைகள், போதிய உணவு கிடைக்காமல் பள்ளிக்கு வந்து செல்வதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த உள்ளனர்.
கனடாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு வரும் சூழலில், வெறும் 21 சதவிகித குழந்தைகள் மட்டுமே இந்த திட்டத்தால் பயனடைகிறார்கள். இந்த திட்டத்தை அனைத்து மாணவர்களும் பயனடையும் வகையில் ழுழு உணவு வழங்கும் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல் அறிக்கையில் இந்த திட்டம் குறித்த வாக்குறுதியை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்திருந்தார். அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக 1 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.