டிபன் தாமதமானதால் தாயை இரும்புகம்பியால் அடித்து கொன்ற மகன்! பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

Siva

ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (07:52 IST)
பெங்களூரில் டிபன் சமைக்க தாமதமானதால் பெற்ற தாயை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில ஆண்டுகளாகவே சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் அடிதடி முதல் கொலை முயற்சி வரை நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பெங்களூரில் காலை உணவு தாயார் சமைத்துக் கொண்டிருந்த நிலையில் காலை உணவை இவ்வளவு தாமதமாக சமைப்பாயா என்று கேட்ட மகன் இரும்பு கம்பியை எடுத்து தாயை சாரமாறியாக அடித்து கொலை செய்து விட்டதாக தெரிகிறது. 
 
அதன் பின்னர் தாயை கொலை செய்துவிட்டதாக வருந்திய அந்த 17 வயது மகன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பள்ளிக்கு செல்வதற்காக கிளம்பி கொண்டிருந்த நிலையில் காலை உணவு தாமதமானதால் தாய் மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. 
 
இந்த நிலையில்  சரணடைந்த 17 வயது  மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்