தொலைதொடர்பு துறையை கட்டி ஆளப்போகும் வோடோபோன், ஐடியா: ஜியோ, ஏர்டெல்லுக்கு பாய் பாய்...

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (18:59 IST)
தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டு 10% வருவாய் இழப்பை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வோடோபோன் மற்றும் ஐடியா நல்ல வளர்ச்சியை காணும் எனவும் கணிக்கப்படுள்ளது.


 

 
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு கட்டணக் குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் 10% இழப்பு ஏற்படும். இந்த இழப்பை ஈடுகட்ட 12 முதல் 24 மாதங்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது.
 
அதே சமயத்தில், வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்து ஏர்டெல் மற்றும் ஜியோவை பின்னுக்கு தள்ளி மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமாக உருவெடுக்கும். 
 
இந்த இரு நிறுவனமும், ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து தொலைத் தொடர்புச் சந்தையின் சுமார் 85 சதவிகிதப் பங்குகளைக் கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்