இது ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு: பேலன்ஸ் பணத்தை வழங்க உத்தரவு!

Webdunia
செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (15:03 IST)
ஏர்செல் நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்களது எண்ணை மற்ற நெட்வொர்க் எண்ணிற்கு போர்ட் செய்தனர். 
 
ஆனால், ஏர்செல் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தாத தொகை, பாதுகாப்பு முன்பணம் ஆகியவற்றை திரும்ப வழங்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. 
 
இதையடுத்து டிராய் ஏர்செல் பயனர்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்த பேலன்ஸ் தொகையும், முன்பணத்தையும் திரும்ப வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுகுறித்த விரிவான அறிக்கையை மே 10 ஆம் தேதிக்குள் சமர்பிக்க டிராய் உத்தரவிட்டுள்ளது. 
இத்துடன் மார்ச் 10, 2018-க்குள் மற்ற நெட்வொர்க்களுக்கு போர்ட் அவுட் செய்யாத பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு பேலன்ஸ் தொகையை வழங்க டிராய் உத்தரவிட்டுள்ளது. 
 
இதை பற்றி ஏர்செல் வாடிக்கையாளர்கள் தெரிந்துக்கொள்வதற்காக பயனர்கள் போர்ட் அவுட் செய்திருக்கும் நெட்வொர்க் ஆப்பரேட்டர்கள் ஏர்செல் வழங்கும் பேலன்ஸ் தொகையை வாடிக்கையாளர்களின் கணக்கில் சேர்த்து, அதனை குறுந்தகவல் மூலம் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்