நான்காவது நாளாக குறைந்த தங்கம் விலை! மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்!

Prasanth Karthick
சனி, 6 ஜனவரி 2024 (10:47 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



தங்கம் விலை தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 3 தினங்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் அதேசமயம் நீண்ட கால அடிப்படையில் கணக்கிட்டால் விரைவில் தங்கம் விலை உயர்வதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளதாக கூறப்படுகிறது. மூன்று நாட்களை தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,850க்கு விற்பனையாகி வருகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,800க்கு விற்பனையாகி வருகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் ரூ.4,792 ஆகவும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ.38,336 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.78 ஆகவும், ஒரு கிலோ ரூ.78,000 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்