ஒப்போ நிறுவனம் ஒப்போ F7 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ ஸ்மார்ட்போன்கள் பொதுவாக செல்பி எடுக்க ஏதுவாக வடிவமைக்கப்படும். இதுவும் அது போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
ஒப்போ F7 ஸ்மார்ட்போன் சோலார் ரெட், மூன்லைட் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.21,990.
இத்துடன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட சன்ரைஸ் ரெட் நிறத்தில் ஒப்போ F7 ஸ்மார்ட்போன் ரூ.26,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஸ்பெஷல் எடிஷனாக டைமன்ட் பிளாக் நிற ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.26,990 என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.