நோக்கியா 3310 கிளாசிக்: மே மாதம் வரை காத்திருங்கள்!!

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (15:02 IST)
நோக்கியாவின் பிரபலமான 3310 மாடல் மொபைல் நவீன மற்றும் புதிய அம்சங்களுடன், மீண்டும் இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது.


 
 
பத்து ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற மொபைல் நோக்கியா 3310 மாடல். இதனை மீண்டும் அதே வடிவில் தொடு திரையுடன் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் வெளியாகயுள்ளது.
 
நீண்ட ஓவல் வடிவத்தில் தொடு திரையுடன், பழைய 3310 மாடலை நினைவுபடுத்தும் வகையிலும் புதிய நோக்கிய 3310 மொபைல் இருக்கும் என தெரிகிறது. 
 
புதிய நோக்கியா 3310 மொபைலின் விலை 3,000 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரையில் இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. பல வண்ணங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
இது பீரிமியம் பதிப்பாக வெளியிடப்படுவதால் குறைந்த அளவில் மட்டுமே கிடைக்கும். வரும் மே மாதம் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்