ரூ.1899-ல் பெங்களூரூ பறக்கலாம்: ஸ்பைஸ் ஜெட் அதிரடி சலுகை

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2015 (05:38 IST)
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் விமான பயணத்தை எளிதாக்கும் வகையில் பல பகுதிகளுக்கும் செல்ல, குறுகிய கால விமான கட்டணச் சலுகையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
 
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் விமான பயணத்தை எளிதாக்கும் வகையில், மும்பை டூ கோவா, அகமதாபாத் டூ மும்பை, பெங்களூர் டூ ஹைதராபாத், சென்னை டூ பெங்களூர், புனே டூ பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு ரூ. 1,899 ரூபாயில் பயணம் மேற்கொள்ளலாம்.
 
ஜூலை 6 ஆம் தேதி இரவு தொடங்கி ஜூலை 8 ஆம் தேதி இரவு 12 மணி வரை இச்சலுகை அமலில் இருக்கும். ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இணையதளம் மற்றும் விமான பயண முகவர்கள் மூலம் இக்கட்டணச் சலுகை டிக்கெட்டுகளை பயணிகள் பெற்றுக்கொள்ளலாம். விமான நிலையங்களில் இச்சலுகை கட்டண டிக்கெட்டுகள் வழங்கப்படமாட்டாது.
 
இந்த அதிரடி கட்டணச் சலுகை குறுகிய காலத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.