ரூ.299க்கு 126 ஜிபி டேட்டா: ஜியோ ஹாலிடே ஹங்காமா!

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (11:15 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது ஜியோ ஹாலிடே ஹங்காமா என்ற பெயரில் ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளது. 
 
இந்த ஆஃபர் மூலம் ரூ.399 ரீசார்ஜ் செய்தால் ரூ.100 உடனடியாக தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. ஜியோவின் ரூ.399 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
மேலும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஜியோ சேவைகள் வழங்கப்படுகிறது. மைஜியோ மற்றும் போன்பெ செயலி மூலம் ரீஜார்ச் செய்து இந்த ஆஃபரை பெற முடியும். இந்த ஆஃபர் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை கிடைக்கும்.
 
சலுகையை பெறுவது எப்படி?
 
# மைஜியோ செயலியில் லாக் இன் செய்து ரீசார்ஜ் செய்யக்கோரும்  ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
# பை பட்டனை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்வும். அப்போது  ரூ.50 உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.
# அதன்பின்னர் போன்பெ வாலெட்-ஐ பேமென்ட் ஆப்ஷனாக தேர்வு செய்ய வேண்டும்
# பின்னர் போன்பெ வாலெட் மூலம் பணம் செலுத்தினால், மேலும் ரூ.50 கேஷபேக் போன்பெ வாலெட்டில் சேர்க்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்