ஆப்லைனில் க்ரோம்: ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களுக்கு கூகுள் சேவை!

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (12:27 IST)
இண்டர்நெட் சேவை இல்லாமல் இனி ஆஃப்லைனில் க்ரோம் ப்ரவுசரை பயன்டுத்தும் வசதியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை குறித்த முழு விவரம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
 
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனதௌ வாடிக்கையார்களை கவர் புது திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி இண்டெர்நெட் இல்லாமல் க்ரோம் ப்ரவுசரை ஆப்லைன் மோடில் பயன்படுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
அதுவும் குறிப்பாக ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்துவோருக்கு மட்டும் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையானவற்றை டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டு பின்னர் அதனை ஆப்லைனில் பயன்படுத்திக்கொள்ளாம். 
 
இந்தியா, நைஜீரியா, இந்தோனேஷியா, பிரேசில் உள்ளிட்ட 100 நாடுகளுக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதனை செயல்படுத்த சமீபத்தைய கூகுள் பதிப்பை பதிவிரக்கம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்