ரூ.9க்கு ஹெல்மெட் வேண்டுமா? அப்போ இதை படிங்க..

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (16:42 IST)
டெல்லியைச் சேர்ந்த டிரூம் என்ற நிறுவனம் வாகனங்கள் விற்பனை மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ரூ.9க்கு ஹெல்மெட் விற்பனை செய்து வருகிறது.



 

 
டெல்லியைச் சேர்ந்த டிரூம் என்ற நிறுவனம் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர பழைய வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஆன்லைனில் தற்போது வாகனங்களின் உபகரணங்களையும் விற்பனை செய்து வருகிறது.
 
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் மாதம் ஒருமுறை ரூ.9க்கு ஹெல்மெட்டை விற்பனை செய்யப்படுகிறது. ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவ்வாறு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஆங்கில நாளிதழ் ஒன்று அந்நிறுவனத்தின் தலைவர் பேட்டியளித்துள்ளார்.
 
ஐஎஸ்ஐ தர முத்திரை சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். ரூ.750 மதிப்புள்ள இந்த ஹெல்மெட்டை தற்போது சலுகை விலையில் ரூ.250க்கும், மாதம் ஒரு முறை ரூ.9க்கும் விற்பனை செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்