ஜிஎஸ்டியால் வர்த்தகர்களுக்கு என்ன லாபம்??

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (15:00 IST)
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்பதின் சுருக்கமே ஜிஎஸ்டி. இது ஒரு மதிப்பு கூடுதல் வரியாகும். ஜிஎஸ்டியின் மூலமாக வரிக்கு வரி விதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.


 
 
ஜிஎஸ்டி விரைவில் அறிமுகப்படுத்தப்படயுள்ள நிலையில் இதை பற்றிய கேள்விகளும் குழப்பங்களும் மக்கள் மத்தியிலும் வர்த்தகர்களின் மத்தியிலும் நிலவி வருகிறது.
 
ஜிஎஸ்டி வரி விதிப்பால் வர்த்தகர்களுக்கு என்ன லாபம் என்பதை பார்ப்போம்... 
 
# சரக்குகள் மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் வர்த்தகம் மற்றும் வரி விதிப்பு முறைப்படுத்தப்படுகிறது. வரி மேல் வரி விதிப்பு தவிர்க்கப்படுகிறது. 
 
# சரக்குகள் மற்றும் சேவைகள் முறையாக கணக்கில் காட்டப்பட்டு வரிகள் செலுத்தப்படுகின்றன. சரக்கு அல்லது சேவைகள் வழங்குபவர் சட்ட படி அங்கீகரிக்கப்படுகிறார். 
 
# உள்ளீட்டு சரக்கு சேவைகளுக்கான வரியை, சரக்கு மற்றும் சேவைகள் வழங்கலுக்கான வரியிலிருந்து வணிகர்கள் கழித்துக் கொள்ளலாம். 
 
# சரக்கு வாங்கியவர்களிடமிருந்து சட்டப் படி வரியை வாங்கலாம். ஜிஎஸ்டி மூலம் சலுகைகளை பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
 
# வேளாண் பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகள் ஜிஎஸ்டி வரியினில் பதிவு செய்ய வேண்டியதில்லை. 
 
# ஜிஎஸ்டி பதிவு பெறாத வர்த்தகர் வாடிக்கையாளர்களிடமிருந்து ஜிஎஸ்டியை வசூலிக்க முடியாது. 
அடுத்த கட்டுரையில்