4 மாதம் கழித்து ரிலையன்ஸ் ஜியோவின் விலை என்ன???

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (10:12 IST)
ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுக சலுகையில் வரம்பற்ற இலவச சேவைகளை வழங்கிவருகிறது. இந்த அறிமுக சலுகை முடிந்தவுடன் ஜியோ சலுகைகளை பெற நாம் கொடுக்க வேண்டிய விலை என்ன??


 
 
இது குறித்து முகேஷ் அம்பானி கூறியவை:
 
வாய்ஸ் கால்:
 
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால்களுக்கு எந்த விதமான கட்டணமும் வகுக்கப்போவது இல்லை.
 
4ஜி டேட்டா: 
 
4ஜி டேட்டா சார்ந்த கட்டணமானது போட்டியாளர்கள் கட்டணத்தில் ஒரு பகுதி வசூலிக்கப்படும்.
 
கனரக பயனர்:
 
ஜியோ 1 ஜிபிக்கு வெறும் 50 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும். கனரக பயனர்களுக்கு சிறப்பு கட்டண விலையில் (ரூ.25) அதே அளவிலான தரவு வழங்கப்படும்.
 
கட்டணம்: 
 
டேட்டா அல்லது வாய்ஸ், ஏதாவது ஒன்றிற்கு மட்டும் கட்டணம் செலுத்தும்படி இருக்குமே தவிர இரண்டிற்கும் கட்டணம் செலுத்த தேவையில்லை.
 
ரோமிங்: 
 
இந்தியா முழுவதும் எந்தவொரு நெட்வெர்க்கிற்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனாளிகளுக்கு ரோமிங் கட்டணம் கிடையாது. 
 
உள்நாட்டு குரல் அழைப்பு: 
 
அனைத்து உள்நாட்டு குரல் அழைப்புகளுக்கும் கட்டணங்கள் கிடையாது.
 
5 பைசாவிற்கு ஒரு எம்பி: 
 
ஜியோ தரவு திட்டங்கள் 5 பைசாவிற்கு ஒரு எம்பி அல்லது ரூ50/-க்கு ஒரு ஜிபி என்ற விகிதத்தில் தான் இருக்கும்.
 
25 சதவீதம் கூடுதல் தரவு: 
 
முக்கியமாக சரியான அடையாள அட்டையுடன் ஜியோ பதிவு செய்பவர்களுக்கு திட்டங்களில் 25 சதவீதம் கூடுதல் தரவு கிடைக்கும்.
 
மொத்ததில், தற்போதைய சந்தை நடைமுறையில் தரவானது ஒரு அடிப்படை வட்டி விகிதத்தில் ரூ.4,000 முதல் ரூ.10,000 என்ற விலையை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், ஜியோ அதன் 10-ல் ஒரு பங்கு அடிப்படை விலை கொண்டது.
அடுத்த கட்டுரையில்