அமேசானின் அமோக விற்பனை: வீழ்ந்தது பிளிப்கார்ட்

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (19:48 IST)
இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் முக்கிய பங்குகளை வகித்தது. இந்த இரு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டிகள் நிலவி வந்தது. 
 
அந்த வகையில், நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த பிளிப்கார்ட்டை பின்னுக்கு தள்ளி அமேசான் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. உலக வணிகத்தில் ஆப்பிள் நிறுவனத்தை அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தாலும் இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் சரிவை சந்தித்தது. 
 
இந்நிலையில், வால்மார்ட் நிறுவனம் அண்மையில் பிளிப்கார்ட்டின் 77% பங்குகளை வாங்கியது. இந்த சூழ்நிலையில்தான் விற்பனையில் பிளிப்கார்ட் நிறுவனத்தை அமேசான் முந்தியுள்ளது.
பிளிப்கார்ட் ஆண்டு விற்பனை:
2016 ஆம் ஆண்டு: ரூ. 26,000 கோடி
2017 ஆம் ஆண்டு: ரூ. 28,000 கோடி
2018 ஆம் ஆண்டு: ரூ. 45,000 கோடி
 
அமேசான் ஆண்டு விற்பனை:
2016 ஆம் ஆண்டு: ரூ.17,000 கோடி
2017 ஆம் ஆண்டு: ரூ.29,000 கோடி
2018 ஆம் ஆண்டு: ரூ.54,000 கோடி

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்